உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடி மாத பிரதோஷ வழிபாடு

ஆடி மாத பிரதோஷ வழிபாடு

திருப்பூர்;ஆடி வெள்ளியுடன் கூடிய பிரதோஷமான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விஸ்வேஸ்வரர் மூலவர், உமாமகேஸ்வரர் உற்சவமூர்த்திகள், அதிகார நந்தி ஆகியோருக்கு, மகா அபிேஷகம் துவங்கியது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய, உமாமகேஸ்வரர், கோவில் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டுக்குழு சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், லட்சுமிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில், எஸ்.வி., காலனி திருநீலகண்டேஸ்வரர் கோவில், அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. ---அருளே பிரசாதம்....திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாட்டில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மையப்பர். அருட்பிரசாதம்...ஆடி வெள்ளியை முன்னிட்டு திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றிய பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ