உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊத்துக்குளி அருகே குடிநீருக்காக மறியல் 

ஊத்துக்குளி அருகே குடிநீருக்காக மறியல் 

திருப்பூர்; ஊத்துக்குளி அருகே, முறையாக குடிநீர் வராததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். ஊத்துக்குளி ஒன்றியம், எஸ்.கத்தாங்கண்ணி ஊராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில், பாப்பம்பாளையம் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்து 10 நாட்களுக்கு மேலாகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆவேசமடைந்த அப்பகுதியினர் நேற்று காலை, ஊத்துக்குளி ரோட்டில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். ஊத்துக்குளி பி.டி.ஓ., சரவணன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினார். இதில் அப்பகுதி மா.கம்யூ., நிர்வாகிகள் பங்கேற்று குடிநீர் பிரச்னை குறித்து விளக்கினர். 'உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என பி.டி.ஓ., உறுதியளித்தார். மறியலில் ஈடுபட்டோர் சமாதானமடைந்து கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை