உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டா மாற்றத்திற்காக ஆர்ப்பாட்டம்

பட்டா மாற்றத்திற்காக ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,;மக்கள் வழிகாட்டி இயக்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இலவச வீட்டு மனை பட்டாவில் நிலவகை மாற்றம் செய்து தராததற்காக பல்லடம் தாசில்தார் மற்றும் தனி தாசில்தாரை கண்டித்தும், பொங்கலுார், காந்திநகர், கலைஞர் நகர், வேலாயுதம்பாளையம், ராஜீவ் நகர், குளத்துப்பாளையம், சுள்ளிக்காடு, அவிநாசி ஒன்றியத்தில் காட்டூர், கலைஞர் நகர், எலவந்தி வடுகபாளையம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதராத ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகங்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி