உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பஸ் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம்

அரசு பஸ் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம்

உடுமலை; உடுமலை அருகே, அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். உடுமலை அருகேயுள்ள எலையமுத்துாருக்கு, பழநியிலிருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலை, 8:30 மணிக்கு பஸ் இந்த பஸ்சில், எலையமுத்துார், பார்த்தசாரதிபுரம் பகுதியிலுள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நுாற்றுக்கணக்கான மாணவர்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்து ஆதாரமாக உள்ள இந்த அரசு பஸ், அடிக்கடி இயக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அரசு பஸ் வராததால், பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலை பள்ளிக்கு வருவதற்கு, பல கி.மீ., துாரம் நடந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் நேற்று காலை, 8:30 மணிக்கு, பழநி - எலையமுத்துார் ரோடு, பார்த்தசாரதி புரத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்த நடத்தி, பஸ் இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !