மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம் 306 மனுக்கள் பதிவு
23 minutes ago
இன்று இனிதாக
25 minutes ago
விற்பனை கூடத்தில் கொப்பரை, தேங்காய் ஏலம்
27 minutes ago
உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளியில், வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'டி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் செல்வ ஸ்ரீராம், பூவர்தன் ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் லீனா, ஒருங்கிணைப்பா ளர்கள் சரண்யா, கார்த்திகை செல்வி, ஆசிரியர்கள் பிரியா, ரோஸினாபானு ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். அறிவை விரிவுபடுத்துகிறது! பள்ளி முதல்வர் லீனா கூறுகையில், ''மாணவர்களின் வாசிப்புத்திறனையும், பொது அறிவையும் மேம்படுத்தும், நன் முயற்சியாக, 'தினமலர்' வெளியிடும் 'பட்டம்' இதழ், சிறப்பாக பயணித்து வருகிறது. உலகின் அனைத்து துறைகளிலும், நடை பெறும் நிகழ்வுகளை, எளிமையாகவும், சுவாரஸ்ய மாகவும், மாணவர் களுக்கு அறிமுகப் படுத்தி, அறிவை விரிவுபடுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. 'பட்டம்' இதழின் இந்த நல்ல முயற்சி தொடர்ந்து வளர்ந்து, இன்னும் பல மாணவர்களுக்கு தகவல் செல்வத்தை சேர்க்க வேண்டும்,'' என்றார்.
செல்வஸ்ரீராம்: 'பெரிதினும் பெரிது கேள்' என்பதற்கேற்ப 'பட்டம்' இதழில் வரும் அறிவியல் துறை குறித்த செய்திகள், பொது அறிவு என நான் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்த செய்திகள் மிகவும் கவரும் வகையில் உள்ளது. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் 'பட்டம்' இதழின் பங்களிப்பு பெரியதாகும். பூவர்தன்: 'பட்டம்' இதழ் வாசிப்பதால், நிறைய புதிய சொற்களை தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமான கவின் உரைகள், அறிவியல் கருத்துகள், பொது அறிவு என படிப்பது எனக்கு பயனளிக்கிறது. அதிலும், விண்வெளித்துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த விரிவான தகவல்கள் அறிவை விசாலமாக்குகிறது. வாசிப்பு திறனும் மேம்படுகிறது. பட்டம் இதழ் வாசிப்பது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.
23 minutes ago
25 minutes ago
27 minutes ago