உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மார்கழி மாத மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

மார்கழி மாத மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கலுார்; வழக்கமாக புரட்டாசியில் பெய்யும் மழைக்கு விவசாயிகள் விதைப்பு பணிகளை துவக்கி விடுவர். கார்த்திகை மாதத்துடன் பருவ மழை ஓய்ந்துவிடும். மார்கழி மாதத்தில் மூடுபனி மட்டுமே பெய்யும். மார்கழி மாத இறுதியில் அறுவடை பணியை முடித்துவிட்டு தை மாதத்தில் அறுவடை திருநாளை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடுவர்.நடப்பாண்டு பருவமழை தாமதமாக துவங்கியது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஐப்பசி மாதத்திலேயே விதைப்பு பணியை துவக்க முடிந்தது. மழை துவங்க ஒரு மாதம் தாமதம் ஆனதால் இறுதியில் மழை இல்லாவிட்டால் அறுவடை செய்ய முடியாதே என்று விவசாயிகள் வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் மார்கழி மாதத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை பெய்தது. இது மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ