உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதி பெறாமல் கட்டிய கட்சி கொடிகள் அகற்றம்

அனுமதி பெறாமல் கட்டிய கட்சி கொடிகள் அகற்றம்

திருப்பூர் : காங்கயத்தில், அனுமதி பெறாமல் ரோட்டோரம் கட்டப்பட்டிருந்த பா.ஜ., கட்சி கொடிகளை அதிகாரிகள் அகற்றினர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சி கொடி கம்பம், பிளக்ஸ் அகற்றப்பட்டு வருகிறது. உரிய அனுமதியில்லாமல் கட்சி கொடிகளை கட்ட கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இச்சூழலில், வெள்ளகோவில் பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் தனது மகன் திருமணத்துக்காக காங்கயத்தில் ரோட்டோரம் பா.ஜ., கட்சி கொடிகளை கட்டியிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து பறக்கும் படை அலுவலர் மீனாட்சி, காங்கயம் போலீசாரிடம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தார்.இருப்பினும், அகற்றப்படாததால், அனைத்து கொடிகளையும் போலீசார் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை