உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிர் திட்ட கடைகளை வாடகைக்கு விடுங்க!  குழுவினர் அரசுக்கு வலியுறுத்தல்

மகளிர் திட்ட கடைகளை வாடகைக்கு விடுங்க!  குழுவினர் அரசுக்கு வலியுறுத்தல்

உடுமலை: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் திட்டம் செயல்படுகிறது. மகளிர் குழுவினர் தயாரிக்கும் கைவினைப்பொருட்களிலிருந்தும் வருவாய் பெறுவதற்கும், பொருட்களை சந்தைப்படுத்தவும், வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடுமலை உழவர் சந்தை அருகே, மகளிர் திட்டத்துக்கான வணிக வளாகம் உள்ளது. கீழ் தளத்தில் ஐந்து மற்றும் மேல் தளத்தில் ஐந்து கடைகள் உள்ளன. பூலாங்கிணற்றில் நான்கு, பெரிய வாளவாடியில் நான்கு கடைகளும் மகளிர் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக, வணிக வளாகத்தை புதுப்பித்து ஏலம் நடத்த வேண்டுமெனவும், காலியாக உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்கும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழுவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், கடந்தாண்டு முதல், கடைகளின் வாடகையும் உயர்த்தப்பட்டது. இருப்பினும், காலியாக உள்ள கடைகள் நிரப்புவதில் தாமதம் தொடர்கிறது. காலியாக உள்ள கடைகளை வாடகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் அதன் பின் வாடகைக்கு விடப்படுவது குறித்து, எந்த அறிவிப்புகளும் இல்லை. பெயரளவில் மட்டுமே கடைகள் வாடகைக்கு விடுவதற்கு, தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அதேபோல், வாளவாடியில் உள்ள கடைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கட்டடத்தை புதுப்பித்து, சீரமைத்து வழங்குவதற்கும் தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஆனால் பயனில்லாத பூட்டிய நிலையில் தான் உள்ளது. இதனால், பலரும் அந்த இடத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். அறிவிப்புடன் மகளிர் திட்டத்தின் செயல்பாடுகள் முடங்கி விடுவதால், வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாய்ப்புக்கு காத்திருக்கும் மகளிர் குழுவினருக்கும்,ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. கடைகளை மேம்படுத்தி, தகுதியுள்ள குழுவினருக்கு வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை தேவை என குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை