உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலை பணிக்கு அகற்றிய மண்ணை பயன்படுத்த கோரிக்கை

நெடுஞ்சாலை பணிக்கு அகற்றிய மண்ணை பயன்படுத்த கோரிக்கை

உடுமலை;உடுமலையில், ரோடு பணிகளுக்காக அகற்றப்பட்ட மண்ணை, கிராமச்சாலைகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, தாராபுரம் ரோடு, இந்திரா நகர் பகுதியில், ரோடு விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால், பாலம் கட்டுமான பணி நடந்தது.இதற்காக தோண்டப்பட்ட, 150 லோடு மண், அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை, தனியாருக்கு விற்பனை செய்ய, முயற்சித்து வருகின்றனர்.இதனை, சின்னவீரம்பட்டி ஊராட்சியில், குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளுக்கு, இந்த மண் கொண்டு நிரப்பினால், புதுப்பிக்கப்படும் வாய்ப்புள்ளது.எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றிய கிராவல் மண்ணை, கிராம ரோடுகள் மற்றும் வீதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை