உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழித்தடம் மாற்றி பஸ் இயக்கம் 3 கி.மீ., மாணவர் நடைபயணம்

வழித்தடம் மாற்றி பஸ் இயக்கம் 3 கி.மீ., மாணவர் நடைபயணம்

திருப்பூர்;திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவில்வழி, அமராவதிபாளையம் வழியாக பெருந்தொழுவுக்கு, '3-இ' பஸ் இயக்கப்படுகிறது.திருப்பூரில் காலை, 5:30க்கு புறப்படும் பஸ், 6:30 க்கு பெருந்தொழுவில் இருந்து கிளம்பி, வாய்க்கால்மேடு, மணியம்பாளையம், புளியாண்டம்பாளையம், நாச்சிபாளையம் வழியாக பயணித்து காங்கயம் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்கிறது.காலை ஒரு டிரிப் இவ்வாறு இயக்கப்படும் பஸ் பிற நேரங்களில், திருப்பூர் - பெருந்தொழுவு இடையே (தாராபுரம் ரோட்டில்) இயங்குகிறது. மாலை, 4:10க்கு பெருந்தொழுவில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்து வருகிறது.இந்நிலையில், நாச்சிபாளையம், வேலன் நகர், திருக்குமரன் நகர், புளியாண்டம்பாளையம், வெள்ளிமலைப்பாளையம், மணியம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், நுாறுக்கு மேற்பட்ட கையொப்பங்களை பெற்று, போக்குவரத்து கழக அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளில் மூன்று மனுக்கள் அளித்துள்ளனர்.அதில், 'கொரானோவுக்கு முன் பெருந்தொழுவு - நாச்சிபாளையம் - காங்கயம் ரோடு - திருப்பூர் வழியாக அனைத்து டிரிப் களும் இந்த பஸ் இயங்கியது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழித்தடத்தை மாற்றி விட்டனர்.பெருந்தொழுவில் படிக்கும் மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பஸ் திருப்பூர் செல்கிறது. ஆனால், நாச்சிபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்ல பஸ் வசதியில்லை.பெரும்பாலான மாணவ, மாணவியர் இரண்டு முதல் மூன்று கி.மீ., நடந்தே வீடு செல்கின்றனர். மாலை தான் இந்த நிலை என்றால், காலையில், 6:30 முதல், 7:00 மணிக்குள் பஸ் கிராமங்களை கடந்து சென்று விடுகிறது. இதனால், பஸ் பயணிகள் மட்டுமின்றி, பள்ளி மாணவ, மாணவியரும் பயன்படுத்த முடிவதில்லை.வெறுமனே பஸ் மட்டும் இயங்குகிறது. காலையில் பள்ளிக்கு ஏதுவான நேரத்தில், தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், பஸ் இயக்க வேண்டும். மாலையில் பெருந்தொழுவு - நாச்சிபாளையம் - திருப்பூர் வழியாக பஸ் இயக்கிட வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை