உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீருக்காக சாலை மறியல்

குடிநீருக்காக சாலை மறியல்

அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில், 1,350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் மற்றும் தெரு குழாய்களில் சப்பை தண்ணீர் வினியோகம் நடைபெறவில்லை எனக்கூறி, பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., (கிராமம்) விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ., அமல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.குடிநீர் வினியோகம் தடை இன்றி சீரான முறையில் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கால இடைவேளையில் வழங்கப்படும் என பி.டி.ஓ., உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ