உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் லாபம் ஆசை காட்டி ரூ.10.80 லட்சம் பறிப்பு

கூடுதல் லாபம் ஆசை காட்டி ரூ.10.80 லட்சம் பறிப்பு

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோட்டை சேர்ந்த, 64 வயதுள்ள ஒரு நபரின், மொபைல் போன் எண்ணுக்கு பங்குசந்தையில் குறைந்த முதலீடுக்கு கூடுதல் லாபம் பெறுவது தொடர்பாக 2024 நவ., 6ம் தேதி லிங்க் ஒன்று வந்தது. இதனை உண்மையென நம்பி, அந்த குறிப்பிட்ட 'லிங்க்' வாயிலாக வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். இதுதொடர்பாக அவர்கள் கூறிய படி, பல்வேறு தவணைகளாக, 10.80 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தார்.பின், தனக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது, மேலும் பணத்தை கட்ட வற்புறுத்தினர். இதனால், சந்தேகமடைந்து அவர் விசாரித்தார். அப்போது தான் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனே இது குறித்து, திருப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை