மேலும் செய்திகள்
அம்மன் கோவில் சொத்து மீட்பு
13-Dec-2024
திருப்பூர்; வெள்ளகோவில் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அ.தி.மு.க., நிர்வாகி ஆக்கிரமித்துள்ளதாக, காங்கயம் பகுதி மக்கள், தாசில்தாரிடம் மனு வழங்கினர்.அதில் கூறியுள்ளதாவது:வெள்ளகோவில் அருகே உள்ளது, நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள உத்தமபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சர்வே எண்.116ல், அரசுக்கு சொந்தமான, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30 சென்ட் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் (பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆக்கிரமித்து, பண்ணை வீடு அமைத்து, தென்னை மரங்கள் வைத்துள்ளார்.அதே கிராமத்தில் மேலும் பல இடங்களை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, ஏழை, எளியோருக்கு பட்டா வழங்க வேண்டும்.
13-Dec-2024