| ADDED : டிச 27, 2025 07:52 AM
திருப்பூர்: திருப்பூர் அருகே பைக்கில் வந்த ராஜஸ்தான் வாலிபரிடம் 53 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்தவர் லசமா ராம், 27. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் பகுதியில் மொத்த விற்பனை மளிகை கடை நடத்திவருகிறார். கடந்த 25ம் தேதி, தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்ததற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை, பொடாரம்பாளையம் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, லசமா ராம், பைக்கில் வந்துள்ளார். அவரிடம் நடத்திய சோதனையில், ஒரு பையில் 53 லட்சம் ரூபாய் ரொக்க பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. அந்த பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.