உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதி பெறாமல் விளம்பரம்; ரூ.75 ஆயிரம் அபராதம் வசூல்

அனுமதி பெறாமல் விளம்பரம்; ரூ.75 ஆயிரம் அபராதம் வசூல்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 117 கே முதல் 117யு வரையிலான ஷரத்துகள் படி, விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர் மற்றும் தட்டிகளை, மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம், 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கிவரும் இரண்டு ஜவுளி கடைகள், நகை கடை ஆகியவை, மாநகராட்சியில் எவ்வித அனுமதியும் பெறாமல், பிளக்ஸ், பேனர், விளம்பர பலகை மற்றும் போஸ்டர்கள் வைத்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட் டுள்ளது. மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்பதை வர்த்தர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை