உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவருக்கு உதவும் மணற்கேணி செயலி

மாணவருக்கு உதவும் மணற்கேணி செயலி

ப ள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, அரசின் 'மணற்கேணி' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறியதாவது: மாணவ, மாணவியர் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், 1 முதல், 12ம் வகுப்புக்குரிய பாடங்கள், அதற்கான விளக்க வீடியோக்கள் உள்ளன; மாணவ, மாணவியர் பள்ளி முடித்து, வீட்டிற்கு சென்ற பிறகும் கூட, அந்த வீடியோவை பார்த்து பாடங்களை தெளிவுப்படுத்தி கொள்ள முடியும்; சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும். அதே போன்று 'நீட்' பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, 2,800 வீடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன; அவற்றை பார்த்து, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். அதே போன்று ஜெ.இ.இ., மற்றும் வழக்கறிஞர் படிப்புக்குரிய 'கிளாட்' தேர்வு பயிற்சி வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை