உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கார்த்திகை சோமவார சங்காபி ேஷக பூஜை: பரம்பொருளை வணங்கி பக்தர்கள் பரவசம்

 கார்த்திகை சோமவார சங்காபி ேஷக பூஜை: பரம்பொருளை வணங்கி பக்தர்கள் பரவசம்

திருப்பூர்: கார்த்திகை மாத, 2வது திங்கட்கிழமையான நேற்று, நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், 108 வலம்புரி சங்காபி ேஷக பூஜை விமரிசையாக நடந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில், சிவாலயங்களில் சங்குதீர்த்த மஹா ஹோம பூஜை மற்றும் சங்காபி ேஷக பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள், விரதம் இருந்து சங்காபி ேஷக பூஜையை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இரண்டாவது திங்கட்கிழமையான நேற்று, நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிேஷகம் விமரிசையாக நடந்தது. ரிசப வாகனத்தில், கலசத்தில் சுவாமியை எழுத்தருள செய்து, சிவாச்சாரியார்கள் ேஹாமம் வளர்த்து, வேதமந்திரங்களுடன் பூஜைகளை செய்தனர். தொடர்ந்து, மூலவருக்கு மகா அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடந்தது. திருப்பூர் மற்றும் நல்லுாரிலுள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை துவங்கி, இரவு:800 மணி வரை, சங்காபிேஷக வழிபாடு நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் நேற்று கார்த்திகை சோமவார சங்காபிேஷக வழிபாடு விமரிசையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ