உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  துாய்மைப்பணி வாகன டிரைவர்கள் போராட்டம்

 துாய்மைப்பணி வாகன டிரைவர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த குப்பைகளை ஏற்றிச்செல்ல ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு நாள்தோறும், 867 ரூபாயும், இலகு ரக வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு, 666 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படாமல் மிகக் குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, பணிக்கு வராத நாட்களில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது. தனியார் நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து துாய்மை பணியில் ஈடுபடும் வாகன டிரைவர்கள் நேற்று மாநகராட்சியின் மாட்டுக்கொட்டகை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக, குப்பை எடுக்கும் பணி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை