உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சத்யசாயி நுாற்றாண்டு விழா  ஒரு வாரம் கொண்டாட்டம்

 சத்யசாயி நுாற்றாண்டு விழா  ஒரு வாரம் கொண்டாட்டம்

திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா திருப்பூரில் பல்வேறு சமூக சேவைகளுடன் ஒரு வார விழாவாக நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், கடந்த, 16ம் தேதி துவங்கிய பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா, வரும், 23ம் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பூர் -- பி.என்.ரோடு, ராம் நகரிலுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா கோவிலில், தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம், மாலை 5:00 மணிக்கு ருத்ர பாராயணம், தொடர்ந்து, 6:00 மணிக்கு சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு மற்றும் மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. விழாவில், நாளை (19ம் தேதி) மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 22ம் தேதி மரக்கன்று நடும் விழா, முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல், 23ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்குதல், சிறப்பு நாராயண சேவை உள்ளிட்ட சமூக சேவை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை