உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடியிருப்பு பகுதியில் பள்ளி வாசல்

குடியிருப்பு பகுதியில் பள்ளி வாசல்

திருப்பூர்; திருப்பூர் வி.ஜி.வி., கார்டன் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பள்ளி வாசல் கட்டப்படவுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு புகார் அளித்தனர். திருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில், ஒருவர் அனுமதியின்றி மதரசா பள்ளி நடத்துவதாக பொதுமக்கள், மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி கமிஷனர் மற்றும் மாநகர போலீஸ் நல்லுார் சரக உதவி கமிஷனர் ஆகியோரிடம் அளித்த மனு விவரம்: நாங்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம். ஒரு சிலர் தங்கள் வீடுகளை விற்பனை செய்து விட்டு வெளியூர் சென்று விட்டனர். அவ்வகையில், கடந்த மூன்று ஆண்டு முன்னர், ஒரு வீட்டை வாங்கிய நபர் தனது வீட்டில் சட்ட விரோதமாக எந்த விதமான அனுமதியும் இன்றி மதரசா பள்ளி நடத்தி வருகிறார். இது குறித்த விவரம் வெளியே பலருக்கும் தெரியவில்லை. தற்போது, அவர் மீண்டும் மற்றொரு வீதியில் ஒரு காலியிடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அங்கு தற்போது போர்வெல் அமைத்து கட்டுமானப் பணிகள் துவங்க ஏற்பாடு நடக்கிறது. அங்கு பள்ளி வாசல் கட்டப்படுவதாக தெரிகிறது. இது போல் குடியிருப்பு பகுதியில் ஒரு தரப்பினர் மத ரீதியான கட்டுமானங்களை அமைத்தால், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் துறைரீதியான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். அப்பகுதியினர் கூறுகையில், 'மதரசா பள்ளி நடத்தி வரும் நபர் தற்போது, பள்ளி வாசல் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், கலெக்டரைச் சந்தித்து இது குறித்து புகார் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை