உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி விளையாட்டு விழா  மாணவர்கள் அசத்தல்  

பள்ளி விளையாட்டு விழா  மாணவர்கள் அசத்தல்  

உடுமலை, ;உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு தின விழா நடந்தது.உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, விளையாட்டு தின விழாவை துவக்கி வைத்தார். போட்டிகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்கள், ஒலிம்பிக் தீபம் ஏற்றினர்.தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பள்ளியின் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் அணி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி செயலாளர் நந்தினி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி நிர்வாகத்தினர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !