அறிவியல் கண்காட்சி பிரன்ட்லைன் பள்ளி அசத்தல்
திருப்பூர்: சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீபண்ணாரி அம்மன் பொறியியல் கல்லுாரியில், 'சயின்ஸ் எக்ஸ்போ நியூட்டன் எரா 2கே24' என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில், பங்கேற்ற திருப்பூர் பிரன்ட்லைன் அகாடமி மாணவர்கள், வேலையாடும் மாடல்கள் மற்றும் வேலையாடாத மாடல்கள் என, இரண்டு பிரிவிலும் முதலிடம் பிடித்தனர். அக்ரிகல்சுரல் ரோவர், பயோ நேப்கின் திட்டமாகும். இதனை தயார் செய்த பிளஸ்1 அறிவியல் பிரிவை சேர்ந்த அஷ்வின், சபரீஷ் ஆகியோர், முதுநிலை ஆசிரியர் ஸ்ரீனிவாசன் வழிகாட்டுதலின் படி முதலிடம் பிடித்தனர். 'பயோ நேப்கின்' திட்டத்தை பத்தாம் வகுப்பை சேர்ந்த மதுமிதா, தீபா தர்ஷினி, முதுநிலை ஆசிரியர் ஸ்ரீவித்யா வழிகாட்டுதல்படி முதலிடம் பிடித்தனர். இந்த அணியின் சாதனைகளை பள்ளி தாளாளர் சிவசாமி, இணை செயலர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.