அறிவியல் இயக்க வினாடி - வினா போட்டி
உடுமலை ; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி-வினா போட்டி மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.அறிவியல் இயக்க கிளை தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் போட்டியை துவக்கி வைத்தார். உடுமலை சுற்றுப்பகுதியிலிருநந்து 21 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.நான்கு, ஐந்து வகுப்பிற்கான பிரிவில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், கிளுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2ம் இடம், கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 3ம் இடமும் பெற்றன.ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கான பிரிவில் பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடம், கிளுவன் காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2ம் இடம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3ம் இடமும் பெற்றன. பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அறிவியல் இயக்க கிளை பொருளாளர் மணி நன்றி தெரிவித்தார்.