மேலும் செய்திகள்
உடைந்த குழாய்கள்; சீரழிந்த சாலைகள்
22-Jan-2025
நிழற்குடை இல்லைமங்கலம் நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லை. நிற்பதற்கும் இடமில்லை. வெயிலில் பயணிகள் நிற்க வேண்டியுள்ளது.- அருண், மங்கலம்.வீணாகும் தண்ணீர்சபாபதிபுரம், குருவாயூரப்பன் கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. சாலை சேதமாகிறது.- சேதுராமன், சபாபதிபுரம்.n திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், முனிசிபல் ஆபீஸ் வீதியில் அவ்வப்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- வின்சென்ட், ராயபுரம்.n மங்கலம், வேட்டுவபாளையத்தில் குடிநீர் தொட்டி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- ஷீபா, வேட்டுவபாளையம்.n திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக கால்வாயில் வீணாகிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.- லோகநாதன், பல்லடம் ரோடு.கம்பத்தில் விரிசல்திருப்பூர், எஸ்.பெரிய பாளையம் ஊராட்சி, குளத்துப்பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின் விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.- மோகன், குளத்துப்பாளையம்.சாலை சேதம்n திருமுருகன்பூண்டி - பூலுவபட்டி ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே கழிவுநீர் வழிந்தோடி சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.- ரவி, பூலுவபட்டி.'துர்நாற்ற' குடிநீர்திருப்பூர், 41வது வார்டு, முருகம்பாளையம் பாறைக்காடு, 4வது வீதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. பிரதான குழாய்களை மாநகராட்சி கவனிக்க வேண்டும்.- கேசவன், பாறைக்காடு.குப்பை தேக்கம்திருப்பூர், 58வது வார்டு, கே.செட்டி பாளைம் - முத்தணம்பாளையம் ரோடு, பழநியாண்டவர் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளப் படாத குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.- குரு, பழநியாண்டவர் நகர்.
22-Jan-2025