உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் தெற்கு தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி

திருப்பூர் தெற்கு தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் அமித் தலைமையில் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி 3 மற்றும் 4 ஆகிய மண்டல அலுவலகங்களில், நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர் அமித் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் (பொது) ராஜசேகர் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார பரப்புரையாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபடும் பி.எல்.ஓ.,க்களுக்கு உதவும் வகையில், களப் பணியாற்றுவது குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. பி.எல்.ஓ.,க்களுடன் பி.எல்.ஏ., 2 இப்பணியின் போது உடன் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்சி சாராத தன்னார்வலர்களாக இந்த ஊழியர்கள் இப்பணியில் பணியாற்றும் வகையில், தெற்கு தொகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை