உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாளையக்காடு கோவிலில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

பாளையக்காடு கோவிலில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

திருப்பூர்; திருப்பூர், பாளையக்காடு, ராஜ்மாதா நகர் வேணுகோபால கிருஷ்ணர் கோவிலில், 39ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கடந்த, 13ம் தேதி மாலை, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீவள்ளுவ விநாயகர் அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை, விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இரவு, 12:00 மணிக்கு, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, தும்பிக்கையாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், வேணுகோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜையும், உரிகட்டும் நிகழ்ச்சியும், மேள, தாளத்துடன் உரி ஊர்வலமும், கோவில் வளாகத்தில் உரியடி உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ