மாநில டென்னிஸ் போட்டி; திருப்பூர் மாணவர் கலக்கல்
திருப்பூர்; சி.எம்.டி.ஏ., சார்பில் நடந்த மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இதில் 14 வயது ஒற்றையர் பிரிவில், பிரனேஷ் முதலிடம்; அஸ்வின் குமார் இரண்டாமிடமும் பெற்றனர். இதில் பிரனேஷ் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றார்.இரட்டையர் பிரிவில் பிரனேஷ் மற்றும் பிரனவ் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். மேலும் 16 வயது ஒற்றையர் பிரிவில் பிரனேஷ் அரையிறுதி போட்டிக்கும், பிரனவ் கால் இறுதிப் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் சந்தோஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரையும், பள்ளி தாளாளர் ஹரி கிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், முதல்வர் ஸ்ரீகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.