உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாரத்தான் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

மாரத்தான் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு 'ரெட்ரன்' மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நடந்த போட்டியை, ஆர்.டி.ஓ.சிவபிரகாஷ் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் இருந்து பல்வேறு கல்லுாரி மாணவ மாணவியர், பங்கேற்றனர். சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியிலிருந்து வஞ்சிபாளையம், கணேஷ் மஹால் வரை சென்று, மீண்டும் கல்லுாரிக்குத் திரும்பும் வகையில் 5 கி.மீ. துாரத்துக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. குமரன் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர். அக்கல்லுாரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ