| ADDED : ஜன 24, 2024 01:40 AM
திருப்பூர், ஜன 24-திருப்பூர், பெருமாள் கோவில் எதிரில் உள்ள வீதியில், 'சுதா சைனேஜஸ் அண்டு டிஸ்பிளேஸ்' என்ற விளம்பர பிரின்டிங் மெட்டீரியல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ேஷாரூம் துவக்கப்பட உள்ளது.இது குறித்து, அதன் நிறுவனத்தார் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தில், சைனேஜஸ், ஸ்பேஷ் டிசைன்ஸ், புரொமோஷனல் டிஸ்பிளேஸ், கியோஸ்க் உள்ளிட்ட பிரிவுகளில், அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது இடத்திற்கே சென்று பொருத்தி தரும் பணியும் செய்து கொடுக்கப்படும்.நிறுவனத்தின் திறப்பு விழா நாளை (25ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் திறந்து வைக்கின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், சுப்ரீம் குழும நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், முதல் விற்பனையை துவக்கி வைக்கின்றனர்.ரோட்டரி மாவட்ட கவர்னர் டாக்டர் சுந்தர்ராஜன், கவர்னர் (தேர்வு) டாக்டர் சுரேஷ் பாபு, கவர்னர் தேர்வு (நியமனம்) தனசேகர் மற்றும் பூபதி, சைமா துணைத் தலைவர் பாலசந்தர் ஆகியோர், வெவ்வேறு பிரிவுகளை துவக்கி வைக்கின்றனர். பெங்களூரு அற்ஹம் குழும நிறுவனங்களின் தலைவர் கமல்நாத், புதிய சைனேஜ் டிஸ்பிளே பொருட்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.