மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
அவிநாசி : அவிநாசி நகர தி.மு.க. சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம், மேற்கு ரத வீதயில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் வசந்தகுமார் தலைமை வகித்தார். நகர தலைவர் ராயப்பன், நகராட்சி தலைவர் தனலட்சுமி வரவேற்றனர். தி.மு.க. அமைப்பு செயலாளர் பாரதி சிறப்புரையாற்றினார். வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், அவிநாசி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பொதுக்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவபிரகாஷ், பால்ராஜ், திருமுருகன் பூண்டி நகரச் செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் அவிநாசி, பூண்டி நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
16-Sep-2025