உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தங்கிலீஷ் வழிகாட்டி பெயர் பலகைகள்; இதற்குப் பெயர்தான் தமிழ் ஆர்வமா?

தங்கிலீஷ் வழிகாட்டி பெயர் பலகைகள்; இதற்குப் பெயர்தான் தமிழ் ஆர்வமா?

திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டுக்குட்பட்ட மங்கலம் சாலை, கருவம்பாளையம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் மாநகராட்சி ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது.அந்த பள்ளி அமைந்துள்ள தெருக்களில், மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகை, தமிழ், ஆங்கிலம் கலந்த 'தங்கிலீஷ்'(?)-ல் எழுதப்பட்டிருக்கிறது.ஆங்கிலத்தில், 'ELEMENTARY' என்பதற்கு பதிலாக, 'ELEMENTRY' எனவும், 'SCHOOL' என்பதற்கு பதிலாக 'SHOOL' எனவும் அச்சிடப்பட்டிருக்கிறது. 'எலிமென்டரி' என்பது ஆங்கிலம், 'பள்ளி கிழக்கு வீதி' என்பது தமிழ். மேலும், 'தொடக்கப்பள்ளி கிழக்கு வீதி' எனவும், 'எலிமென்டரி பள்ளி கிழக்கு வீதி' எனவும், தமிழ், ஆங்கிலம் கலந்த வழிகாட்டி பலகைகள், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.இந்தப் புகாரை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள திருப்பூர் மாநகர காங்., முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன், ''40 ஆசிரியர்கள், ஆயிரம் மாணவர்களை கொண்டு செயல்படும் அரசு பள்ளியின் எதிரில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை தினசரி பார்த்து, படிக்கும் மாணவ, மாணவியர் மனதில், தவறான வார்த்தைகள் சரியானது என பதிந்து விடாதா? அந்த பெயர் பலகை வைக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிறது.அரசுப்பள்ளி என்பதால், அவ்வப்போது கல்வி அதிகாரிகள், ஆய்வுக்காக வந்து செல்கின்றனர். ஒருவர் கண்ணில் கூட, இந்த தவறு தென்படாதது வியப்பளிக்கிறது.இதே தவறு, வாக்காளர் பட்டியலிலும் எதிரொலித்திருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் தவறை திருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை