மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
உடுமலை, ; உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் மிலாடி நபி கொண்டாடப்பட்டது. குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம், மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தின சிறப்பு தினங்கள் கொண்டாடப்பட்டன. மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் கேரள நடனம் ஆடினர். தொடர்ந்து முகமது நபியின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் ஜூலியா, முதல்வர் மஞ்சுளாதேவி தலைமை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். * உடுமலை ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் மற்றும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மாலா விழாவை துவக்கி வைத்தார். ஓணம் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். மழலையர் பிரிவு மாணவர்கள் கேரள பாரம்பரிய உடையணிந்து நாடகம் மற்றும் நடனமாடினர். ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் மாணவர்கள் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். விழாவில் உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனத்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
05-Sep-2025