உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் சாலையிலுள்ள குழிகளுக்கு மண் நிரப்பிய மாநகராட்சி நிர்வாகம்

மங்கலம் சாலையிலுள்ள குழிகளுக்கு மண் நிரப்பிய மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர் : விபத்துக்கு வழி ஏற்படுத்தும் வகையில், பாரப்பாளையம், மங்கலம் ரோட்டில் இருந்த குழிகள், 'தினமலர்' செய்தி எதிரொலியால், தற்காலிகமாக மண் நிரப்பி சமன் செய்யப்பட்டது.மத்திய பஸ் ஸ்டாண்ட் துவங்கி, பாரப்பாளையம் வரை, மங்கலம் ரோட்டில், தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம். மாநகராட்சி அலுவலகம் துவங்கி, பாரப்பாளையம் வரை, ரோடு குறுகலாகவே உள்ளது. ரோடு விரிவாக்கப்பணி, கிடப்பில் உள்ளது. மாநகராட்சியின், 4வது குடிநீர் திட்ட பணிகளுக்காக, மங்கலம் ரோடு பகுதியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டன.அதன்பின், பகிர்மான குழாய் பதிக்கும் பணியும் நடந்தது. இதனால், ரோடு, பல இடங்களில் துண்டாடப்பட்டது. ஏற்கனவே, குண்டும், குழியுமாக இருந்த ரோடு, இதனால் மேலும் பாதிக்கப்பட்டது. தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை.பல இடங்களில் ரோட்டின் மையப்பகுயிலேயே, சிறிய பள்ளங்கள் ஏற்பட்டன. சிறிய மழை பெய்தால் கூட, டூவீலர் ஓட்டிகளால், சாலையில் பயணிக்க மிக சிரமம். குறிப்பாக, தாடிக்கார முக்கு, பட்டத்தரசியம்மன் கோவில் பகுதிகள், கருவம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதிகள், பழக்குடோன் ரோடு பகுதிகள் அதிகளவு சேதமடைந்துள்ளன.இதுதொடர்பாக, புகைப்படத்துடன் கூடிய செய்தி, நேற்று, நம் நாளிதழில் வெளியானது. இதையறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர், சேதமடைந்த சாலைகளில் மண் நிரப்பி, சமப்படுத்தினர். இது, தற்காலிக தீர்வு தான் என்ற போதிலும், அப்பகுதியில் உள்ள மக்கள், வாகன ஓட்டிகள் திருப்தியடைந்தனர்.---மங்கலம் ரோடு, தாடிக்கார முக்கு மற்றும் மாகாளியம்மன் கோவில் அருகில், சாலையிலுள்ள குழிகளுக்கு தற்காலிக ஏற்பாடாக மண் கொட்டப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு எப்போது?

மங்கலம் ரோட்டில் உள்ள குழிகளை மூட வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்த பின், உடனடியாக, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, குழிகளில் மண் நிரப்பி, தற்காலிக தீர்வு ஏற்படுத்தினர், விரைவில், நிரந்தர தீர்வு காணும் முயற்சியாக தார் சாலை, அதுவும் தரமாக அமைக்க வேண்டும். அப்போது தான் இப்பிரச்னை முடிவுக்கு வரும்.- பொதுமக்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை