மேலும் செய்திகள்
வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்
15-Dec-2024
திருப்பூர்; நிரந்தரமாக நீர்வளம் பெற வேண்டி வட்டமலை கரை அணையில், 10,008 அகல் விளக்கு தீபம் ஏற்றி விவசாயிகள், பொதுமக்கள் வழிபட்டனர்.வெள்ளகோவில், உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. முப்பது கிராம விவசாயிகள் பாசனம் பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.கடந்த, ஐந்து ஆண்டுகளாக கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அகல் விளக்கு ஏற்றுதல் மற்றும் மராத்தான் விழிப்புணர்வு போட்டி தன்னார்வ அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அணைக்கு நிரந்தரமாக நீர்வளம் பெற வேண்டியும், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும், ஆறாவது ஆண்டாகநேற்று மாலை வட்டமலை கரை ஓடை நீர் வழிந்தோடும் பகுதியில்,10,008 அகல் விளக்குகளை விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் ஏற்றி வழிபட்டனர்.
15-Dec-2024