உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புற்றுநோயை உண்டாக்கும் பாஸ்ட் புட் கலாசாரம்!

புற்றுநோயை உண்டாக்கும் பாஸ்ட் புட் கலாசாரம்!

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., (அலகு - 2) சார்பில், தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.'திருப்பூரில், உள்ளூர் மட்டுமின்றி, பிற மாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். பான்பராக், குட்கா, புகையிலை பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அதேபோல், உணவு பழக்க வழக்கங்களும் மாறுபடுகின்றன.புரதச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உட்கொள்வது. திரும்ப திரும்ப பொறித்தெடுத்த எண்ணெயில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களை சாப்பிடுவது, 'பாஸ்ட் புட்' உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதும் 'கேன்சர்' ஏற்பட காரணமாக இருக்கிறது.மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயால் பெண்கள் அதிகளவில் பாதிக்கின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சையை துவக்கினால், பூரண குணம் பெற முடியும்,' என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.அதன்பின், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி, ஆசிரியர்கள் சாந்தி, ரேவதி, உமா மகேஸ்வரி, யேசு ஆரோக்கியததேயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை