உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊர்வலத்தில் மதவெறி கோஷம் ஹிந்து முன்னணி கண்டனம்

ஊர்வலத்தில் மதவெறி கோஷம் ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்:'ஊட்டியில் நடந்த முஸ்லிம்கள் ஊர்வலத்தில் எழுப்பிய மதவெறி கோஷத்தை, தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது' என, ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:ஊட்டியில் நடந்த மிலாடி நபி ஊர்வலத்தில், குதிரையில், பாகிஸ்தான் கொடி போன்ற முஸ்லிம் பிறை கொடியை ஏந்தி, ஊர்வலம் நடத்தினர். தமிழகத்தில் ஹிந்துக்களின் எந்த ஊர்வலத்திலும், எந்த விலங்குகளையும் அனுமதிப்பதில்லை. ஆனால், ஊட்டியில் நடந்த ஊர்வலத்தில் ஒருவர் குதிரை மீது ஏறி அமர்ந்து வருகிறார்.

இரட்டை நிலைப்பாடு

சிறுபான்மையினரின் ஓட்டுக்காக பெரும்பான்மை ஹிந்துக்களின் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை ஹிந்துக்கள் உணர வேண்டும். ஊட்டியில் நடந்த ஊர்வலத்தை கலெக்டர், எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., துவக்கி வைத்துள்ளனர். அதில், மத கோஷங்கள் எழுப்பியதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஊர்வலத்தில் பங்கு பெறுவது ஏற்புடையதல்ல; இது ஒருதலைப்பட்சமானது.மற்ற மதத்தின் திருவிழாக்கள் என்றால் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளும் தமிழக அரசு, ஹிந்துக்கள் திருவிழாக்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை