| ADDED : ஜூலை 30, 2024 11:50 PM
கொடுவாய் பகுதியிலுள்ள பெருமாள் கோவிலில், 2 நாள் முன், 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் - இந்திரா காலனியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மகன் செல்வம், 24 என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது பைக் மோதி ஒருவர் வலி விஜயமங்கலத்தை சேர்ந்தவர் ரவிபாண்டி, 34. இவர், பனியன் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். 29ம் தேதி இரவு, பைக்கில் கிருபானந்தன், என்பவருடன் வீட்டுக்கு புறப்பட்டார். ஆதியூர் பிரிவு மேம்பாலம் அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. படுகாயம் அடைந்த இருவரும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழியில், ரவிபாண்டி உயிரிழந்தார். கிருபானந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற வாலிபர் கைதுபெருமாநல்லுார் ஊராட்சி, கொண்டத்து காளியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதை அறிந்து, போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலம், பவுன் சோனி என்ற பகுதியை சேர்ந்த நரேஷ் சேத்தி, 27, என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து இங்கு பனியன் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.பணம் திருடியவர் சிக்கினார்