உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசம் தானே நம்மை வாழ வைக்குது!

தேசம் தானே நம்மை வாழ வைக்குது!

குமரன் கல்லுாரி திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். கூட்டுறவு சார் பதிவாளர் கார்த்திகை செல்வி, தேசிய கொடியேற்றினார். உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி, குமரன் கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல் ராஜ், கூட்டுறவு கட்ட சங்க செயலாளர்கள் செல்வி வெங்கடாச்சலம் (திருப்பூர்), ராமசுப்ரமணியம் (தாராபுரம்), வெங்கடேஷ்குமார், (ஈரோடு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றை, மாணவிகள் வாசித்தனர். பின், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. l திருப்பூர் மாநகராட்சி, திருநீலகண்டபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம், முன்னாள் மாணவர் சங்கத்தின் கனகராஜ், நடராஜ் மற்றும் ஆசிரியர், பெற்றோர் பங்கேற்றனர். l திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சிறந்த நுகர்வோர் செயல்பாட்டாளர் நற்சான்றிதழ், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் சிந்து சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். l திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு அலுவலகத்தில், அதன் தலைவர் சிந்து சுப்ரமணியம், கொடியேற்றினார். செயலாளர் வெங்கடாஜலபதி, பொருளாளர் ஈஸ்வரன், துணை செயலர் குமார் உட்பட பலரும் பங்கேற்றனர். l திருப்பூர், கருப்பகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியை லட்சுமி பிரபா, பேசினார். ஆசிரியைகள் தீபாமாலினி, தவப்பிரியா, திவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். l திருப்பூர் மாவட்ட எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் முத்துசாமி, தலைமை வகித்தார். சிறுபூலுவப்பட்டி மாவட்ட அலுவலகம், பெருமாநல்லுார், சேவூர், தங்கமேடு, பல்லடத்தில் கொடியேற்றப்பட்டது. நிர்வாகிகள் கலைச்செல்வன், முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை