உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

உடுமலை: உடுமலை அருகே, கல்லாபுரம் ஊராட்சியில், மலைவாழ் மக்கள் குடியிருப்பில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி காயமடைந்தார். வீடுகளில் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.உடுமலை ஒன்றியம், கல்லாபுரம் ஊராட்சி, கரட்டுபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில், மயிலாத்தாள், 57, என்பவருக்கு, முதல்வரின் சூரிய சக்திமின் வசதியுடன் கூடிய, பசுமை வீடு திட்டத்தின் கீழ், கடந்த, 2021 - 22ம் நிதியாண்டில், ரூ.3 லட்சம் மதிப்பில், வீடு கட்டி தரப்பட்டது. தரமற்ற கட்டுமான பணி காரணமாக, வீட்டின் மேற்கூரை, இடிந்து விழுவதோடு, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், மயிலாத்தாள் வீட்டிற்குள் இருந்த போது, திடீரென மேற்கூரை இடிந்து, அவர் கால் மேல் விழுந்தது. இதில், காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, கல்லாபுரம் ஊராட்சியில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இரு ஆண்டு களில் பழுதடைந்துள்ள வீடுகளை புதுப்பிக்க வேண்டும், என மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி