மேலும் செய்திகள்
குறுமைய அளவிலான செஸ் போட்டி: மாணவர்கள் அசத்தல்
17-Jul-2025
உடுமலை; உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான குறுமைய கோ-கோ மற்றும் டெனிகாய்ட் போட்டி நடந்தது. உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கான குறுமைய போட்டி தொடர்ந்து நடக்கிறது. உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கான டெனிகாய்ட் மற்றும் மாணவர்களுக்கான கோ-கோ போட்டி நடந்தது. கோ-கோ போட்டியில், 14 வயதினருக்கான பிரிவில் எஸ்.கே.பி., பள்ளி முதலிடத்திலும், பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன. 17 மற்றும் 19 வயதினருக்கான பிரிவில் எஸ்.கே.பி., பள்ளி முதலிடத்திலும், ஓம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. மாணவியருக்கான டெனிகாய்ட் ஒற்றையர் ஆட்டம்: 14 வயதினருக்கான பிரிவில் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடத்திலும், எஸ்.கே.பி., இரண்டாமிடத்திலும், வெற்றி பெற்றன. 17 வயதினருக்கான பிரிவில் மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., பள்ளி முதலிடத்திலும் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 19 வயதினருக்கான பிரிவில், உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், எஸ்.கே.பி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் ஆட்டம்: 14 வயதினருக்கான பிரிவில் கொங்கல்நகரம் முதலிடம், எஸ்.கே.பி., பள்ளி இரண்டாமிடம், 19 வயதினருக்கான பிரிவில் எஸ்.கே.பி., பள்ளி முதலிடம், புங்கமுத்துார் காந்தி கலா நிலையப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
17-Jul-2025