உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளின் குரல் எழுத்தாக வேண்டும்

விவசாயிகளின் குரல் எழுத்தாக வேண்டும்

திருப்பூர்: ''விவசாயிகள் குறித்த நாவல்கள் மற்றும் படைப்புகள், தமிழில் குறைவாகவே வெளியாகி யுள்ளன'' என்று எழுத்தாளர் சோ.தர்மன் ஆதங்கப்பட்டார். திருப்பூரில் நடந்த, எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் கூடுகையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் பங்கேற்று, கலந்துரையாடினார்.அவர் பேசுகையில், ''நம் நாடு, இன்னும் விவசாய நாடு தான். மொத்த மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால், தமிழ் மொழியில் விவசாயிகளை குறித்த நாவல்கள், படைப்புகள் குறைவாகவே வெளி வந்துள்ளன. எழுத்தாளர்கள், தாங்கள் வாழும் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்க்கை சூழலை, தங்கள் எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும். அவரவர் வட்டார மொழியில் அதை எழுத வேண்டும். வட்டார மொழி என்பது, பொது மொழியல்ல என்பது, தவறான கருத்து. அது, மக்களின் மொழியை, நடைமுறைக்கு கொண்டு வருகிறது,'' என்றார். எழுத்தாளர்கள் ஆரோ, கிருஷ்ணமூர்த்தி, அழகுபாண்டி, அரசப்பன், சுப்ரபாரதி மணியன், குறும்பட இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி