உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசி அடுத்த கருக்கம்பாளையம், கணேசபுரத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ தன்னாசியப்பன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், மாயவர் சுவாமி ஆகிய பரிவார மூர்த்திகள் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இன்று முனி பூஜை, ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் படைக்கலம், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 7ம் தேதி பொங்கல் வைத்தல், அலங்கார பூஜை, கிடா வெட்டுதல் ஆகியவை நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, ஸ்ரீ கருப்பராயன் திருவீதி உலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை