உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 ஆயிரம் மாணவர் பங்கேற்கும் திருக்குறள் முற்றோதல் விழா

3 ஆயிரம் மாணவர் பங்கேற்கும் திருக்குறள் முற்றோதல் விழா

திருப்பூர்,; பள்ளி மாணவ, மாணவியர் 3000 பேர் பங்கேற்கும் திருக்குறள் முற்றோதல் உலக அருஞ்செயல் நிகழ்வு, ஆக., 10ம் தேதி நடக்க உள்ளது.அட்சரம் பவுண்டேஷன், அய்யா பவுண்டேஷன் சார்பில், 'யூத் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு' சாதனைக்காக, 3 ஆயிரம் பேர் பங்கேற்கும், திருக்குறள் முற்றோதல் நடக்க உள்ளது. உலக பொதுமறையாம் திருக்குறள் குறித்து மக்களிடையேயும், மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதன்முதலாக இம்முயற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்துமதி கூறியதாவது:இளைஞர்கள், திருக்குறளை வாழ்வியலாக கொண்டு வாழ வேண்டும். திருக்குறள் மீது உயர் மதிப்பு உருவாக வேண்டும். முதன்முறையாக, ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கும், திருக்குறள் முற்றோதல் நடக்கிறது; விரைவில், விழா நடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, மரப்பேழையில் வைத்து, பட்டுத்துணி போர்த்திய திருக்குறள் புத்தகம் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், திருக்குறள் மற்றும் தமிழ்மொழி மீது ஆர்வம் உள்ளவர்கள் பங்களிப்பு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 95667 11643 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி