மேலும் செய்திகள்
செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
24-Apr-2025
திருப்பூர்; சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளான நேற்று, திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை விழா நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருநாவுக்கரசு நாயனார் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது.அலங்கரிக்கப்பட்ட உற்சவர், கோவில் பிரகாரத்தை வலம் வந்து, நடராஜப்பெருமான் திருவடியை சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது. மாணிக்கவாசகர் திருக்கூட்டம், அர்த்தஜாம பூஜை அடியார் திருக்கூட்டத்தினர் பங்கேற்று, தேவாரம் மற்றும் திருவாசக பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர். அவிநாசி
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜை பெருவிழா, பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில் திருமுறை கண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடந்தன. பண்ணிசையோடு திருநாவுக்கரசர் அருளிய தேவார திருப்பதிகங்கள் முற்றோதுதல் நடைபெற்றது. திருநாவுக்கரசு சுவாமிகள் புறப்பாடு, திருப்புகலுார் பெருமானோடு கலத்தல் நிகழ்ச்சி ஆகியன நடந்தன.
24-Apr-2025