மேலும் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 20 ஆண்டு சிறை
29-Aug-2025
- நமது நிருபர் -ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய மூவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 2022 முதல், முதல்நிலை காவலராக பணியாற்றியவர் மகாதேவன், 35. காவலர் அருள்குமார், 32. இரவு வாகனத்தணிக்கையில் ஈடுபட்ட போது, டூவீலரில் வந்த, 3 பேரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், அருள்குமாரின் தலையில் தாக்கிவிட்டு, தப்பினர். அவிநாசி போலீசில் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, திருநெல்வேலி மானுாரை சேர்ந்த ராஜ்குமார், 31, சுரேஷ்குமார், 35, மார்டின், 41 ஆகிய, 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை, திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில், நீதிபதி மோகனவள்ளி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளிகள், 3 பேருக்கும், தலா, 7 ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் செந்தில்குமார், ஆஜரானார்.
29-Aug-2025