n ஆன்மிகம் n தீபமேற்றும் நிகழ்வு வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு பாஞ்சராத்ர தீபமேற்றும் நிகழ்வு - மாலை 6:15 மணி. மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. ஸ்ரீ சைலம் நாட்டியாலய மோகினியாட்டம், குச்சிபுடி நடனம் - மாலை 6:45 மணி. n பொது n வேலைவாய்ப்பு முகாம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண், 439, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை. மதிப்பீட்டு முகாம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி. ஏற்பாடு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. பதவியேற்பு விழா புதிய நிர்வாக குழு பதவியேற்பு விழா, திருப்பூர் கிளப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம். மாலை 6:00 மணி. சிறப்பு வகுப்பு 'திருக்குறள் திருப்பணி' எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு, ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதி நகர், காங்கயம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. ஆர்ப்பாட்டம் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம். காலை 10:00 மணி. நினைவு நாள் நிகழ்ச்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க. காலை 9:30 மணி. மருத்துவ முகாம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, இலவச பொது மருத்துவ முகாம், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 11:30 மணி வரை. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. n விளையாட்டு n விளையாட்டு விழா எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளி, கரடி வாவி, பல்லடம். முன்னாள் மாணவ, மாணவியருக்கான கயிறு இழுத்தல் போட்டி - காலை 10:00 மணி.