உள்ளூர் செய்திகள்

கழிப்பிடம் ஏலம்

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் ஊராட்சியில் அமைந்துள்ள பொது கழிப்பிடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் நேற்று ஏலம் விடப்பட்டது.ஏலத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, ஆகியோர் நடத்தினர். பொது கழிப்பிடம் இரண்டு லட்சத்து, 98 ஆயிரம் ரூபாய்க்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மூன்று லட்சத்து, ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.கடந்த முறை பொது கழிப்பிடம், 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், 75 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை