உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி விலை விவசாயிகள் ஏமாற்றம்

தக்காளி விலை விவசாயிகள் ஏமாற்றம்

உடுமலை: உடுமலை சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை உயராமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, தக்காளி பிரதான சாகுபடியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும், 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தக்காளி பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, உடுமலை சந்தைக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி விலை, 200 ரூபாயாகவே தொடர்கிறது. இதனால், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ