உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலக்கடலை சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

நிலக்கடலை சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

உடுமலை: உடுமலை, செல்லப்பம்பாளையத்தில், வேளாண் பல்கலை மாணவர்கள், நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.உடுமலை, செல்லப்பம்பாளையத்தில், விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் நடந்தது. கோவை வேளாண் பல்கலை, இறுதி ஆண்டு இளநிலை வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள், இயந்திர உழவு பணி மேற்கொள்ளும் வழிமுறைகள், நீர், உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, களை மேலாண்மை, அறுவடை பணிகள், கூடுதல் மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.தொடர்ந்து, நிலக்கடலை சாகுபடியில், வேளாண் பல்கலைக்கழக வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட 'கிரவுண்ட் நட் ரிச்' என்னும் பயிர் பூஸ்டர் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்ப விழிப்புணர்வு குறித்த கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை