மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
உடுமலை; கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுக்கு வீட்டு சுத்திகரிப்பு கருவிகளில் ஒன்றான, 'வேக்குவம் கிளீனர்' கருவியை செய்வது, அதன் பயன்பாடு குறித்து, விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடந்தது. ஒரு குழுவிற்கு, 6 மாணவர்கள் வீதம், 5 குழுக்களாக, 30 மாணவர்கள் இந்த கருவியை செய்து, அதன் பயன்பாடுகளையும் அறிந்து கொண்டனர். 'மெகா டிங்கரிங் அடல் இன்னோவேஷன் மிஷன்' அமைப்பின் சார்பில், இந்த கருவியை செய்வதற்கான பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சுஜிதா, நந்தாதேவி, மாணவர்களை பயிற்சிக்கு தயார் செய்தனர்.